26-ந்தேதி சலூன் கடைகள் அடைப்பு போராட்டம்

26ந்தேதி சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-18 15:52 GMT
மதுரை,

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில இணைச்செயலாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

மருத்துவர் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடும், சமூக பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 5 லட்சம் சலூன் கடைகளை அடைத்து வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் குலகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்