கொளத்தூர் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
கொளத்தூர் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டவர் கைது.
கொளத்தூர்,
கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர் காளையனூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 33). இவர் மீது கடந்த ஆண்டு கொளத்தூர் அருகே இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டது என இருவேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் வீரப்பன் கொளத்தூர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று கருங்கல்லூரில் இருந்த வீரப்பனை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் கைது செய்து மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.