தாய் திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தாய் திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-13 20:01 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மனத்தாங்குளம் கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் நவீன் தினகரன்(வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏ.சி. மெக்கானிக் பிரிவில் படித்து வந்தார். இவர், தனது தாயிடம் தினமும் செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று செலவுக்கு பணம் கேட்டபோது, அவருடைய தாய் பணம் தர மறுத்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீன் தினகரன், கீழப்பழுவூர் செல்லும் சாலைக்கு இடையே உள்ள பகுதிக்கு சென்று விஷம் குடித்தார். அவர் வாந்தி எடுத்ததை பார்த்த அந்த வழியே சென்றவர்கள், இது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த குடும்பத்தினர், நவீன் தினகரனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்