2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தவணையில் 2,915 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-02-13 19:47 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-வது நாளான நேற்று சுகாதார பணியாளர்கள் 59 பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 43 பேருக்கும், போலீசார் 8 பேருக்கும் என மொத்தம் 110 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தம் 2,915 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தவணையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து 2-ம் தவணையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசியை, முதல் நாளில் போட்டுக்கொண்ட மாவட்ட சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணியும், அரசு மருத்துவமனை டாக்டர் லெட்சுமணனும் 2-ம் தவணையாக நேற்று கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்