வடக்கு விஜயநாராயணத்தில் தொடர் உண்ணாவிரதம்; நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விவசாயிகள் அனுமதி

வடக்கு விஜயநாராயணத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-02-13 19:42 GMT
இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் உண்ணாவிரதம்

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து குளத்தை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் வலியுறுத்தி பெரியகுளம் அனைத்து பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 11-ஆம் தேதி குளத்தின் கரை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதனை அறிந்த அ.தி.மு.க. நெல்லை மாவட்டச்செயலாளர் தச்சை என்.கணேசராஜா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வடக்கு விஜயநாராயணத்துக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

தொடர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறாததால் நள்ளிரவு திடீரென நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசாஸ்டெபல்லாதெரஸ், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வந்தனர்.

உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க நிர்வாகிகள் முருகன் (வயது 50), ராஜகோபால் (56), தட்சிணாமூர்த்தி (55), ஏழாங்காலை சேர்ந்த விவசாயி மாரிமுத்து (35) ஆகியோரை 108 ஆம்புலன்சில் ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். ஆஸ்பத்திரியிலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்