நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட 1,320 டன் சின்னசோளம்
நாமக்கல்லுக்கு 1,320 டன் சின்னசோளம் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து வாங்கி சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கோழித்தீவன மூலப்பொருளான சின்னசோளம் 1,320 டன் சரக்கு ரெயிலில் நாமக்கல் கொண்டு வரப்பட்டது.
இந்த சின்னசோள மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.