சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-02-13 18:55 GMT
பெரம்பலூர்:
சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கோட்ட பொறியாளர் சாபுதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வரை சென்று மீண்டும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் உதவி கோட்ட பொறியாளர் பாபுராஜன், உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்