திருப்பூரில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

திருப்பூரில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

Update: 2021-02-13 17:03 GMT
திருப்பூர்:-
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் 275 பேர் பணியாற்றி வந்தனர். அதில் 94 காலிப்பணியிடங்கள் உருவானது. அதற்கான தேர்வு திருப்பூர் மாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 15 பெண்கள் உள்பட 94 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 45 நாட்கள் கவாத்து உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் மதிய விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்க்காவல் படை மண்டல தளபதி பிரபு மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர். புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பணியில் சேர்வார்கள் என்ற தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்