தூத்துக்குடியில் கப்பல் ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் கப்பல் ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-02-13 16:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கப்பல் ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

கப்பல் ஊழியர்
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊர் திரும்பிய தினேஷ் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி அஞ்சலி மற்றும் குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில் தினேஷ் வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்வையிட்டபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது.

30 பவுன் நகைகள்
மேலும் வீட்டுக்குள் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். எனினும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீ்ட்டிற்கு வந்தால்தான் கொள்ளை போன நகைகளின் மதிப்பு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
-----------

மேலும் செய்திகள்