திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
திருப்பூர்:-
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 மற்றும் திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் புஷ்பா ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கொடிச்செல்வன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தனர்.
இதன் பின்னர் மாணவ செயலாளர்கள் சந்தோஷ், சந்தீப், காமராஜ் தலைமையில் 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை யோகா செய்து அசத்தினர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும், விபத்து ஏற்படுவது போலவும் நாடகம் நடித்து காட்டினர்.