திருவண்ணாமலை; கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் சிவா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 12 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.