ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், (வயது 25). இவருக்கும் எழிச்சூர் பகுதியை சேர்ந்த சூர்யா, (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் வடகால் பகுதியில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் மனவருத்தம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த டர்பன்டைனை (பெயிண்டில் கலக்கும் திரவம்) குடித்துள்ளார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ஒரகடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.