சேலத்தில் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் மறியல்

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் சங்கத்தினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-12 23:27 GMT
சேலம்:
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் சங்கத்தினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகேசன், நாகராஜன், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரேஷன்கடை பணியாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம் மற்றும் தனித்துறை, பணிவரன் முறை உருவாக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
70 பேர் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்