நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-02-12 22:15 GMT
கடத்தூர்
ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளிகள் சுமார் 200 பேர் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு 3-ம் நிலை நூலகர் பணியை வழங்க 20.11.2020 தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இந்த 3-ம் நிலை நூலகர் பணியில் தற்போது காலியிடங்கள் 350-க்கு மேல் உள்ளது. இந்த காலியிடங்களில் ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்களை நிரப்பவேண்டும். மேலும் 15 ஆண்டாக தமிழகத்தில் நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்