அவதூறாக பேசியதாக முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவதூறாக பேசியதாக முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2021-02-12 21:18 GMT
நாமக்கல்,

நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் மாநில நிர்வாகி ஜெயசீலன், கடந்த 2011-ம் ஆண்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டதோடு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவர் கடந்த 9-ந் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்கத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இதனால் சாதி மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்