‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி; பச்சைமலையில் சாலை பணிகள் தீவிரம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பச்சைமலையில் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-02-12 21:07 GMT

உப்பிலியபுரம், பிப்.13-
சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டி வரை செல்லும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சாலை, மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதுதொடர்பான செய்தி படத்துடன் ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக, சாலையை மேம்படுத்த வனத்துறையினர் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன், பச்சைமலையிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறையினரின் கட்டுப்பாடிலுள்ள சாலைகளை, திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் வடிவேல் ஆய்வு செய்தார். அதனையடுத்து டாப்செங்காட்டுப்பட்டி முதல் தோனூர் வரையிலான சாலையை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்