புதுச்சேரியில் 5 மாத அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம்

புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கான அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம் வழங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2021-02-12 21:01 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்தார்.

தற்போது அரசின் கையிருப்பில் போதுமான நிதி இருப்பதால் சமூக நல அமைச்சர் கந்தசாமியின் பரிந்துரையின்படி புதுச்சேரியில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கான அரிசிக்கு ஈடான ரேஷன் அட்டை ஒன்றுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.52 கோடியே 84 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான கோப்பு கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அனைத்து சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரத்து 134 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்