11 பேர் எங்கே? கலெக்டர் கேள்வி

11 பேர் எங்கே? கலெக்டர் கேள்வி

Update: 2021-02-12 21:01 GMT
சிவகாசி, 
சாத்தூர் அருகே நடை பெற்ற பட்டாசு அலை வெடி விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்கள் மீட்டு சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கான மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 11 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வர வில்லை. பின்னர் 2 மணி நேரம் கழித்து சிவகாசி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர்களின் பட்டியலை கலெக்டர் கண்ணன் சரி பார்த்த போது 11 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வர வில்லை என கண்டறியப்பட்டது. அவர்கள் வேறு ஏதாவது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்களா? என போலீசாரும், வருவாய்த்துறையிரும் தீவிரமாக விசாரித்தனர். இரவு 7 மணி வரை அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பட்டாசு தொழிலாளர்களின் பட்டியலை மருத்துவ மனை தலைமை டாக்டர் அய்யனார் கலெக்டரிடம் கொடுத்து விளக்கினார். சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் குறித்து விசாரித்து தகவல் தெரிவிக்கும்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்