நெல்லை, தென்காசியில் 25 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசியில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை;
நெல்லை மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 15 ஆயிரத்து 382 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 60 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 ஆயிரத்து 278 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 159 பேர் உயிரிழந்து உள்ளனர்.