குளத்தில் மண் அள்ளிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் அருகே குளத்தில் மண் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை:
கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரை அடுத்த காந்திஷ்வரம் புதூரைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி, அதனை லாரியில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றார். அப்போது அங்கு ரோந்து சென்ற கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா ஜென்சி மற்றும் போலீசார், நாகராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.