கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கட்டுமான சங்கம் சார்பில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான சங்கத்தின் தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். கட்டுமான பொருட்களான கம்பி, சிமெண்டு ஆகியவற்றின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்கள் விலை 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மன்மதன், செல்வகுமார், அய்யம்பெருமாள், ரமேஷ் ராஜா, சிதம்பரம், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.