வடக்கு விஜயநாராயணத்தில் 2-வது நாளாக விவசாயிகள்

வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-12 19:53 GMT
இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் பெரியகுளத்தை முழுமையாக ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெரியகுளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு விஜயநாராயணம் சுற்று வட்டார பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் விஜயநாராயணபுரம் பெரியகுளம் கரையின் அருகில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வடக்கு விஜயநாராயணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்