சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குன்னத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-02-12 19:44 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. குன்னம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊர்வலத்தை குன்னம் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சாலை பாதுகாப்பு, சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்று, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி சாலை விதிகள் குறித்த கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். ஊர்வலமானது வேப்பூர் சாலை, அரியலூர் சாலை, சிவன்கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள், சாலைகள் வழியாக வந்த ஊர்வலம் பஸ் நிலையத்தில் முடிந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கள், சாலை பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட துறை சார்ந்த பணியாளர்கள், வாகன ஓட்டிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்