ஆர்ப்பாட்டம்
ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வதுரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.