கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அறிஞர்கள் பிரசார பயணம்

தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அறிஞர்களின் பிரசார பயணம் புறப்பட்டது.

Update: 2021-02-12 17:45 GMT
கன்னியாகுமரி, -
தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழ் அறிஞர்களின் பிரசார பயணம் புறப்பட்டது.
பிரசார பயணம்
பன்னாட்டு தமிழுறவு மன்றமும், அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டியும், கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்த வலியுறுத்தியும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பிரசார பயணம் செல்ல முடிவு செய்யப்பட்டது,
அதன்படி, இந்த பிரசார பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று தொடங்கியது. குமரி மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற தலைவர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலாளர் பத்மநாபன், அருட்பணியாளர் வின்சென்ட் அடிகளார், குமரி மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற ஆலோசகர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அய்யப்பன் பிள்ளை வரவேற்றுப் பேசினார். 
புறப்பட்டது
நிகழ்ச்சியில் கவிமணி மன்ற தலைவர் நாகேந்திரன், பிரம்மஞான சங்க பொருளாளர் பொன்.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலோசகர் தாஸ் நன்றி கூறினார்.
பின்னர் பன்னாட்டு தமிழுறவு மன்ற தலைவர் கவிஞர் வா.மு. சேதுராமன் தலைமையில் தமிழ் பரப்புரைப் பயணம் புறப்பட்டது. இந்த பயணம் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக வருகிற 21-ந் தேதி சென்னை சென்றடைகிறது.

மேலும் செய்திகள்