பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் பணம் திருடப்பட்டது

Update: 2021-02-12 16:56 GMT
பேரையூர், 
பேரையூர் அருகே உள்ள விட்டல்பட்டியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 28). இவர் வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.11 ஆயிரம், வெள்ளி பொருட்கள், ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாண்டித்துரை சாப்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்