வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-02-12 16:28 GMT
திருமங்கலம், 
திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று பணி முடிந்து வழக்கம்போல் வங்கியை மூடி விட்டு சென்றனர். இந்தநிலையில் வங்கியில் அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கி ஊழியர்கள் திறந்து பார்த்தபோது கண்காணிப்பு கேமராவிற்கு சென்ற வயரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது. வங்கியில் அலாரம் ஒலித்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்