அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு வினாத்தாள் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு வினாத்தாள் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

Update: 2021-02-12 16:24 GMT
அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் வினாத்தாள் வைக்கப்படும் அறை உள்ளது. 
நேற்று காலை இந்த அறைக்கு வந்த பல்கலைக்கழக ஊழியர்கள் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் அறையின் மேற்கூரை திடிரென இடிந்து விழுந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். தேர்வு கட்டுப்பாட்டு மையத்தில் வினாத்தாள் வைக்கும் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்