முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானங்கரை சேர்ந்த பாண்டி மகன் செந்தூர்பாண்டி (வயது 32). இவர் மோட்டார் சைக் கிளில் தேரிருவேலி காவல் நிலையம் அருகில் சென்றபோது புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது நிலைதடுமாறி மோதி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.