தூத்துக்குடியில் கஞசா விற்ற 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் கஞசா விற்ற 2 வாலிபர்கள் கைது

Update: 2021-02-12 14:48 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ராஜீவ்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக நடன ஆசிரியர் கதிர்வேல்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கிருஷ்ணராஜ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ராஜீவ்நகரில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக ஷெரீப் (24) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்