கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-02-12 12:55 GMT
தொண்டி,
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடலோர கிராமத்தில் மழைக்காலங்களில் கடல் அரிப்பு மற்றும் புயலால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு நிலப்பரப்பில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடற்கரையோரம் அமைக்கப்பட்டு இருந்த தார் சாலை சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு முற்றிலுமாக சேதமாகி விட்டது.  கடல் அரிப்பு மற்றும் புயல் பாதிப்பு காரணமாக இங்குள்ள மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வதில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த கடற்கரை கிராம மக்களின் வாழ்வாதாரம் காக்கவும் மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட உடமைகளை பாதுகாக்கவும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் செய்வது அவசிய மாகிறது. அதன் அடிப்படையில் கடல் அரிப்பை தடுக்க முள்ளிமுனை கிராமத்தில் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் பொதுப் பணித்துறை மூலம் ரூ.422.86 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்