காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-12 12:37 GMT
பரமக்குடி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை கண்டித்து பரமக்குடியில் நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் நகர் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆலம், மாநில செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் டாக்டர் செல்லத்துரை அப்துல்லா, சோ.பா. ரெங்கநாதன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் சரவணகாந்தி ஆகியோர் வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினர். பின்பு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகர், ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் நாராயணன், நகர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காஜா நஜ்முதீன், சேக் அப்துல்லா, கண்ணன், ராஜா முகம்மது, ஹாரிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர் மாணவரணி தலைவர் அஜித் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்