குலுக்கல் முறையில் 54 வீடுகள் ஒதுக்கீடு
வேலூரில் குடிசை மாற்று வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் 54 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர்
வேலூரில் குடிசை மாற்று வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் 54 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர் முத்துமண்டபம் அருகில் குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இங்கு 64 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பெற விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அசோகன், உதவி நிர்வாக பொறியாளர் வேல்முருகன், இளநிலை பொறியாளர் கவிதா, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
54 வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி முடிந்தது. மீதமுள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் இதனருகே குடியிருக்கும் குடியிருப்புவாசிகள், தங்கள் குடியிருப்புகளுக்கு சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அதிகாரிகள், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளை களைய குடியிருப்போர் நலச்சங்கம் ஆரம்பித்து நிர்வாகிகளை நீங்களே தேர்வு செய்து, எங்களிடம் பிரச்சினைகளை முறையிட்டால் உடனடியாக தீர்க்கப்படும் என்றனர்.
--