யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோகுல மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோகுல மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-02-12 02:11 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த கோகுல மக்கள் கட்சி சார்பில் யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோகுல மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் கலியராஜ் யாதவ் தலைமை தாங்கினார். யாதவ சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் யாதவ், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகனகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் காந்தராஜ், மகளிர் அணி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் கலந்து கொண்டு யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் இது தொடர்பான மனுவை கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி. சேகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்