சேலத்தில் வக்கீலிடம் கத்திமுனையில் நகை பறிப்பு
சேலத்தில் வக்கீலிடம் கத்திமுனையில் நகைபறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் வக்கீலிடம் கத்திமுனையில் நகைபறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கத்திமுனையில் நகைபறிப்பு
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 33). வக்கீலான இவர், நேற்று முன்தினம் இரவு 4 ரோட்டில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 4 ரோடு அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து யுவராஜை வழிமறித்ததாகவும், பின்னர் கத்தி முனையில் அவரை மிரட்டி 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
கைது
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சின்னதிருப்பதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் (45), மணக்காடு பகுதியை சேர்ந்த ரத்தினம் (36), அவரது உறவினர் சதீஷ் (34) ஆகியோர் வக்கீல் யுவராஜிடம் நகையை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.