பவானிசாகர் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பூ பறிக்கும் தொழிலாளர்கள் பாதிப்பு

பவானிசாகர் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பூ பறிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Update: 2021-02-11 22:51 GMT
பவானிசாகர்
பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தபள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கி, மல்லிகை போன்ற பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த பகுதியில் தினமும் சராசரியாக 2  டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் பறிக்கப்படுகின்றன. இந்த பூக்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக நாள்தோறும் அதிகாலை 2 மணி முதல் ஏராளமான பெண் தொழிலாளர்கள் பவானிசாகர் பகுதியில் பூப்பறிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த பணி மதியம் 1 மணி வரை நடைபெறும். 
இந்த நிலையில் பவானிசாகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பூப்பறிக்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பூ பறிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘நாள்தோறும் பூக்களின் விலை வேறுபடுகிறது. இதனால் பூ பறிக்கும் பணி மிகவும் அவசியமானதாகும். எனவே அதிகாலையில் எவ்வளவு குளிராக இருந்தாலும் பூக்களை பறிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது,’ என்றனர். 

மேலும் செய்திகள்