எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ரூ.18¼ லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2021-02-11 21:27 GMT
மொடக்குறிச்சி
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 351 மூட்டைகளில் 14 ஆயிரத்து 920 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 130 ரூபாய் 65 காசு முதல் 133 ரூபாய் 99 காசு வரையும், 2-ம் தரம் 82 ரூபாய் 95 காசு முதல் 117 ரூபாய் 99 காசு வரையும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 39 ஆயிரத்து 194-க்கு விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்