கெரகோடஅள்ளியில் தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசம்

கெரகோடஅள்ளியில் தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2021-02-11 21:18 GMT
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). இவர் தனது வீட்டு அருகில் கயிறு திரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக தேங்காய் நார்கள் வீட்டுக்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தேங்காய் நார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட கோவிந்தன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் செய்திகள்