கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா நேற்று தொடங்கியது.

Update: 2021-02-11 21:18 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. 

இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கு மண்டகப்படி விழாக்குழு தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதையொட்டி காலை 10.30 மணியளவில் அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 11 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

அதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது.

மேலும் செய்திகள்