தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா அறிகுறி உள்ளதையடுத்து மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியைக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஆசிரியை பாடம் நடத்திய வகுப்புகளில் படிக்கும் மாணவிகளை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.