அரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா அறிகுறி மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

அரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா அறிகுறி இருந்தததையடுத்து மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2021-02-11 20:58 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூரில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆங்கில துறையில் பணிபுரிந்து வரும் ஒரு பேராசிரியருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த கல்லூரியில் ஆங்கில துறையில் படித்து வரும் மாணவர்களை தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  இதன்படி மாணவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மற்ற பாட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசு கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் மாணவர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் மற்ற பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்