கார் மோதி 17 ஆடுகள் சாவு
மதுக்கூர் அருகே கார் மோதி 17 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே கார் மோதி 17 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
ஆட்டு கிடை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45). இவர் மதுக்கூர் அருகே சிலம்பவேளங்காடு பகுதியில் தங்கி ஆடுகளை கிடை போட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஆடுகளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை பகுதியில் கிடை போடுவதற்காக சிலம்பவேளங்காடு பகுதியிலிருந்து ஆடுகளை சண்முகத்திடம் வேலைபார்க்கும் ஜெயபால் உள்ளிட்ட சிலர் கொண்டு சென்றனர்.
17 ஆடுகள் சாவு
அப்போது அதிராம்பட்டினம் மதுக்கூர் சாலையில் மூத்தாக்குறிச்சி அருகே வந்த போது எதிரே அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 17 ஆடுகள் இறந்தன. மேலும் ஆடுகளை கொண்டு வந்த ஜெயபாலுக்கு காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனை பார்த்த அக்கம்பத்தினர் காயமடைந்த ஜெயபாலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து சண்முகம் மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.