திருச்சியில் நள்ளிரவில் இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
திருச்சியில் நள்ளிரவில் இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
திருச்சி,
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் இரும்பு கடை ஒன்றில் நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வந்தது. தீ விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. விபத்து குறித்து பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.