திருச்சி,
தை அமாவாசையையொட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிம்கோ காலனியில் உள்ள ஆயி மகமாயி சமயபுரத்தாள் கோவிலில் கரக உற்சவ விழா நடந்தது. இதனையொட்டி காலையில் விசேஷ ஹோமத்துடன் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவிலில் இருந்து பம்பை, உடுக்கை மேளதாளத்துடன் ஏராளமான பக்தர்கள் கரகம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.