அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது;
விருதுநகர்.பிப்
விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் சந்தன மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யப்பன் என்பவரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர். குணசேகரன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். ஞானசேகரன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.