தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி தேர்தல் பிரசாரம்

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு கூட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-02-11 20:24 GMT
புளியங்குடி:

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, கூட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று காலை 9 மணி அளவில் கடையநல்லூரில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து காலை 10 மணி அளவில் புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் மதியம் சங்கரன்கோவிலில் நடைபெறும் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் பேசுகிறார்.

ஏற்பாடுகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தேர்தல் பிரசார கூட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் மும்முரமாக செய்து வருகின்றனர். புளியங்குடி கண்ணா திரையரங்கு வளாகத்தில் செய்யப்படும் ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
புளியங்குடி நகர அ.தி.மு.க. செயலாளர் பரமேஸ்வரன் பாண்டியன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்