செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

Update: 2021-02-11 20:20 GMT
மதுரை
தமிழக அரசு கால்நடை பாதுகாப்புத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகிறது. இதுகுறித்து கால்நடை பன்முக மருத்துவமனை வைரவசாமி கூறுகையில், இன்று முதல் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் என்னும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணியை மண்டல இணை இயக்குனர் ராஜதிலகன் தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனிதர்களுக்கும் வெறிநோய் பரவுவதை தடுக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகள்