பெருமாள் கோவில்களில் கருட சேவை

நெல்லை டவுனில் பெருமாள் கோவில்களில் கருட சேவை நடந்தது.

Update: 2021-02-11 19:55 GMT
நெல்லை:

நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபெருமாள், லட்சுமி நரசிங்கப்பெருமாள் கரியமாணிக்கப் பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள், கீழதிருவேங்கடநாதபுரம் வரதராஜ பெருமாள் ஆகிய 5 பெருமாள் கோவில்களில் நேற்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்