விருதுநகரில் 7 பவுன் நகை திருட்டு

விருதுநகரில் 7 பவுன் நகை திருட்டு

Update: 2021-02-11 19:08 GMT
விருதுநகர்,பிப்
விருதுநகர் எஸ்.எம்.ஜி. பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாபு (வயது 35). இவர் தனது வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசு மாயமாகிவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.
மேலும் தனது வீட்டில் ஜக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த மீனா (40) என்பவர் வேலை பார்த்ததாகவும், நகை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்போவதை அறிந்து அவர் வேலைக்கு வரவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்