மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.